பாதுகாப்பு விதிகளை மீறியதாக ஏர் இந்தியாவுக்கு விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் ரூ.1.10 கோடி அபராதம் விதித்துள்ளது.
நீண்ட தூரம் இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்களில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்திற்கு புகார் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள், புகாரில் முகாந்திரம் இருந்ததால் விளக்கம் கேட்டு ஏர் இந்தியா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பினர்.
குத்தகைக்கு எடுக்கப்பட்ட விமானத்தின் செயல்பாடுகள் ஒழுங்குமுறை வரம்புகளுக்கு இணங்கவில்லை என்பதால், விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.அதன் ஒரு பகுதியாக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 1.10 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.