இதுபோன்ற பத்திரிகையாளர்கள் ஊடகத் துறைக்கே அவமானம்: அண்ணாமலை காட்டம்!
Sep 13, 2026, 12:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இதுபோன்ற பத்திரிகையாளர்கள் ஊடகத் துறைக்கே அவமானம்: அண்ணாமலை காட்டம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 25, 2024, 01:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆளும் தி.மு.க. அரசை மகிழ்விக்கும் பிரச்சார இயந்திரமாகச் செயல்படும் பத்திரிகையாளர் ஜனநாயகத்தின் 4-வது தூணான ஊடகத் துறைக்கே அவமானம்” என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்திருக்கிறார்.

செய்தியாளர்களை தரக்குறைவாகப் பேசுவதாகக் கூறி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை கண்டித்து சில செய்தியாளர்கள் இன்று மாலை 4 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுத்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “எனக்கு எதிராகக் களமிறக்கப்பட்டுள்ள, தி.மு.க. என்ற வெங்காயத்தின் முதல் அடுக்கு என்று பரவலாக அறியப்பட்டவர்கள், இன்றைய தினம் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள் என்பதை அறிகிறேன்.

இன்றைய ஆர்ப்பாட்டம், கடந்த ஒரு ஆண்டில் மட்டும், எனக்கு எதிராக இந்தக் கும்பலால் நடத்தப்படும் 3-வது ஆர்ப்பாட்டமாகும். இதனை நான் பெருமையாகவே கருதுகிறேன். தாங்கள் ஒரு பத்திரிகையாளர் என்பதை மறந்துவிட்டு, தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளர் போல் நடந்து கொள்ளும், வெங்காயத்தின் முதல் அடுக்கான இவர்களின் உண்மை நிலைப்பாடு குறித்த சில எடுத்துக்காட்டுகள் இதோ.

The first layer of the DMK onion, as we popularly know it, is activated & I understand that they are assembling today to protest against me.

Today’s protest is the 3rd such protest carried out by this group against me in the last year & I consider it a badge of honour.

Here… pic.twitter.com/1LCVzs0izA

— K.Annamalai (@annamalai_k) January 25, 2024

பத்திரிக்கையாளர்கள் வேஷம் போட்ட இந்த சில தி.மு.க. அடிவருடிகளால், இனியும் தமிழ்நாட்டு அரசியலின் போக்கை முடிவு செய்யவோ, கட்டுப்படுத்தவோ முடியாது. தங்கள் உயிரைப் பணயம் வைத்து, மக்கள் பிரச்சனைகளை வெளிக் கொண்டு வரும் பத்திரிகையாளர்களுடன் தோளோடு தோள் நிற்கிறேன்.

அதே நேரத்தில், ஆளும் தி.மு.க. அரசை மகிழ்விக்கும் பிரச்சார இயந்திரமாகச் செயல்படுபவர்களை நான் வெறுக்கிறேன். அவர்கள் ஜனநாயகத்தின் 4-வது தூணான ஊடகத் துறைக்கே அவமானம்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: annamalaiattackTN BJP LeaderDMK Pro Journalist
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் பா.ஜ.க. 25 தொகுதிகளை கைப்பற்றும்: சிவராஜ் சிங் சௌஹான்!

Next Post

தைப்பூச திருவிழா – திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies