சிறிய கடையில், மசாலா டீ குடித்த பிரதமர் மோடி, அதிபர் இம்மானுவேல் !
Jul 31, 2026, 11:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறிய கடையில், மசாலா டீ குடித்த பிரதமர் மோடி, அதிபர் இம்மானுவேல் !

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 26, 2024, 03:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் 75-வது குடியரசு தின விழா, இன்று ( ஜனவரி 26 ) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டு அதிபரான இம்மானுவேல் மேக்ரான் நேற்று இந்தியா வந்தார்.

தனி விமானம் மூலமாக நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு வந்தார். அவரை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஆகியோர் வரவேற்றனர்.

அதன் பிறகு ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் கோட்டையை முதலில் பார்வையிட்ட மேக்ரான் அதன் பின், அங்கு நடந்த கலாச்சார நிகழ்ச்சி, கைவினைப் பொருட்களின் கண்காட்சியை பார்த்து வியந்தார்.

இதையடுத்து, ஜந்தர் மந்தரில் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை பிரதமர் மோடி வரவேற்றார். பின்பு அருகில் இருந்த 18ம் நுாற்றாண்டு விண்வெளி ஆய்வுக் கூடத்தை இருவரும் சுற்றிப் பார்த்தனர். இதை பாரம்பரிய கட்டடமாக யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது.

அதன் பின், ஜெய்ப்பூர் நகரை சுற்றிப் பார்ப்பதற்காக, அதிபர் மேக்ரானை திறந்தவெளி ஜீப்பில் பிரதமர் அழைத்து சென்றார். இருவரும் ஹவா மஹால் முன் இறங்கி, 1,000 ஜன்னல்கள் உடைய அந்த மாளிகையின் அழகை கண்டு ரசித்தனர்.

அதன் அருகே இருந்த கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்குள் இருநாட்டு தலைவர்களும் சென்றனர். அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த அயோத்தி ராமர் கோவில் மாதிரியை வாங்கி, மேக்ரானுக்கு பிரதமர் மோடி பரிசளித்தார்.

அதற்கான தொகையாக 500 ரூபாயை, ‘டிஜிட்டல்’ பணப்பரிவர்த்தனை வாயிலாக பிரதமர் செலுத்தினார். கடையை விட்டு வெளியே வந்ததும், அங்குள்ள சிறிய டீ கடையில் நின்ற பிரதமர் மோடி, அதிபர் மேக்ரானுக்கு சூடான மசாலா டீ வாங்கிக் கொடுத்தார்.

டீக்கு பணம் பெற்றுக் கொள்ள கடைக்காரர் மறுத்தார். பிரதமர் வலியுறுத்தி சொன்னதும், 2 ரூபாய் தரும்படி கூறினார். அந்த தொகையையும், ‘டிஜிட்டல்’ பரிவர்த்தனை வாயிலாகவே பிரதமர் செலுத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags: Francepmmodirepublicdayteashopimanuvelmacron
ShareTweetSendShare
Previous Post

நம் ஜனநாயகத்தின் அடித்தளம் வாக்காளர்கள் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Next Post

சவுதி அரேபியாவில் முதல் மதுபான கடை திறப்பு !

Related News

அமெரிக்கா- சவூதி அணுசக்தி ஒப்பந்தம் : சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் : சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுக்கு 100 % கூடுதல் வரி : ட்ரம்புக்கு அதிகாரம் வழங்கும் மசோதா செனட் சபை ஒப்புதல் – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் முதல் 1200 kV டிரான்ஸ்பார்மர் : இந்தியாவின் மின்சாரப் புரட்சி, வல்லரசுகளுக்கு சவால் – சிறப்பு தொகுப்பு!

வெற்றி பெறாமலேயே வெற்றி, போரில் ஈரான் சாதித்தது எப்படி? : நவீன போரின் புதிய கணக்கு – சிறப்பு தொகுப்பு!

எதிரிக்கு எச்சரிக்கை மணி : களமிறங்கும் இந்தியாவின் ‘பிரளய்’ ஏவுகணை – சிறப்பு தொகுப்பு!

அசாமில் கொட்டி தீர்த்த மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

இனறைய தங்கம் விலை!

வினாத்தாள் கசிவால் 750 கோடி மாணவர்கள் பாதிப்பா? – பிரியாங்கா காந்திக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கேள்வி!

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியை நாடாளுமன்றத்தில் விமர்சித்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி – கல்வியாளர்கள் கண்டனம்!

மாநிலங்களவையிலும் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேறியது!

சென்னையில் சிக்னல் கோளாறு காரணமாக ஒரே தண்டவாளத்தில் இரு புறநகர் ரயில்கள் அடுத்தடுத்து சென்றதா? – ரயில்வே நிர்வாகம் விளக்கம்!

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது – டி.கே.சிவகுமார்

முன்ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு – தமிழக அரசு கேவியட் மனுத்தாக்கல்!

மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை – மத்திய அரசு விளக்கம்!

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை – மக்களவையில் நிறைவேறியது மசோதா!

நாட்டின் தேர்வு முறையை மேலும் வலுப்படுத்த தொடர் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies