ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டுக்கு விரைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள்!
Sep 12, 2026, 04:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டுக்கு விரைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 29, 2024, 03:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் டெல்லி வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று விசாரணைக்குச் சென்றிருக்கிறார்கள்.

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருக்கும் ஹேமந்த் சோரன் மீது சுரங்க ஒதுக்கீடு வழக்கு, நில மோசடி வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இந்த இரு வழக்குகள் தொடர்பாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சூழலில், நில மோசடி வழக்கு தொடர்பாக, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், 7 முறை சம்மன் அனுப்பியும் ஹேமந்த் சோரன் ஆஜராகவில்லை. இதையடுத்து, 8-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்து அமலாக்கத்துறைக்கு ஹேமந்த் சோரன் அனுப்பிய கடிதத்தில், “அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக முடியாத சூழலில் இருக்கிறேன். ஆகவே, எனது வீட்டில் வந்து விசாரணை நடத்திக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, கடந்த 20-ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரன் வீட்டுக்கு வருகை தந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, மற்றொரு சம்மனை அமலாக்கத்துறை அனுப்பியது.

அதில், மீண்டும் விசாரணை நடத்தவிருப்பதால், அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு கூறியிருந்தது. எனினும், இந்த சம்மனுக்கும் பதிலளித்த ஹேமந்த் சோரன் நேரில் ஆஜராக இயலாது. வேண்டுமானால் எனது வீட்டில் வந்து விசாரணை நடத்திக் கொள்ளுங்கள்எ ன்று கூறியிருந்தார்.

இதையடுத்து, அமலாக்கத்துறை அனுப்பிய பதில் கடிதத்தில், விசாரணைக்கு வரும் 29 அல்லது 31-ம் ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒரு தேதியை உறுதி செய்யுமாறும், அப்படி இல்லாவிட்டால், இரண்டு நாட்களில் ஏதோ ஒரு நாளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டில் வந்து விசாரணை நடத்துவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில், ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து டெல்லியிலுள்ள தனது வீட்டிற்குச் சென்று விட்டார், இதையறிந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், டெல்லியிலுள்ள ஹேமந்த் சோரனின் வீட்டுக்கு விசாரணைக்கு வந்திருக்கின்றனர். மேலும், டெல்லியிலுள்ள ஜார்க்கண்ட் பவனிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதையொட்டி, ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள பா.ஜ.க. அலுவலகம் மற்றும் அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்களின் வீடுகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. அமலாக்கத்துறை விசாரணையைத் தொடர்ந்து, ஜாம்ஷெட்பூர், பலாமு மற்றும் கிரிதிஹ் ஆகிய இடங்களில் நடைபெறவிருந்த சோரனின் நிகழ்ச்சிகள், மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Tags: delhiEnforcement DirectorateJharkhandCM Hemant Soren
Share
Tweet
SendShare
Previous Post

மாநிலங்களவையில் காலியாக உள்ள 56 இடங்களுக்கு பிப்.27-ல் தேர்தல் நடைபெறும்! – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Next Post

உளுந்தூர்பேட்டை அருகே கோர விபத்து! – 2 பேர் பலி, 20 பேர் காயம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies