நீதி வழங்குவதை உறுதி செய்ய 'ஒத்துழைப்பு' மற்றும் 'ஒருங்கிணைப்பு' ஆகியவை முக்கிய மந்திரமாக இருக்க வேண்டும்! - அமித் ஷா
Sep 12, 2026, 05:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதி வழங்குவதை உறுதி செய்ய ‘ஒத்துழைப்பு’ மற்றும் ‘ஒருங்கிணைப்பு’ ஆகியவை முக்கிய மந்திரமாக இருக்க வேண்டும்! – அமித் ஷா

Murugesan M by Murugesan M
Feb 5, 2024, 10:27 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மற்ற நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படாமல் எந்த நாடும் பாதுகாப்பாக இருக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

புது டெல்லியில் நேற்று (2024 பிப்ரவரி 4,) நடைபெற்ற காமன்வெல்த் சட்டக் கல்விச் சங்க காமன்வெல்த் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் தலைமைச் சட்ட ஆலோசகர்கள் மாநாட்டின் நிறைவு விழாவுக்கு குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு தலைமை வகித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். உச்சநீதிமன்ற நீதிபதிகள்  சூர்யகாந்த், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு)  அர்ஜுன் ராம் மேக்வால், இந்திய அட்டார்னி ஜெனரல் டாக்டர் ஆர் வெங்கடரமணி, இந்திய சொலிசிட்டர் ஜெனரல் திரு துஷார் மேத்தா, காமன்வெல்த் சட்டக் கல்வி சங்கத்தின் தலைவர் டாக்டர் எஸ் சிவக்குமார் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா,

வர்த்தகத்திற்கோ அல்லது குற்றங்களுக்கோ புவியியல் எல்லைகள் முக்கியமல்ல என்று அவர் கூறினார். வர்த்தகம் மற்றும் குற்றம் இரண்டுமே எல்லையற்றதாகி வருகின்றன என்று அவர் தெரிவித்தார். இதுபோன்ற நேரங்களில், வர்த்தக தகராறுகள் மற்றும் குற்றங்களை எல்லையற்ற முறையில் கையாள, நாம் சில புதிய அமைப்பையும் பாரம்பரியத்தையும் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சாதாரண மனிதனின் வாழ்க்கையில் நீதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் தெரிவித்தார். திருமதி திரௌபதி முர்மு இந்தியாவின் தொலைதூர மற்றும் மிகவும் பின்தங்கிய பகுதியிலிருந்து வந்தவர் என்றும், அவர் இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகிப்பது இந்தியாவில் ஜனநாயகத்தின் வேர்கள் மற்றும் அரசியலமைப்பின் உணர்வு ஆழமாக உள்ளதைக் காட்டுகிறது என்று கூறினார்.

உள்ளூர் தகராறுகள் முதல் எல்லை தாண்டிய தகராறுகள் வரை, அனைத்தும் அதிகரித்து வருகிறது என்று தெரிவித்தார். சிறிய திருட்டு முதல் வங்கி அமைப்பு மற்றும் தரவுகளை ஹேக் செய்வது வரை முழு செயல்முறையும் ஆழமாகி வருகிறது என கூறினார்.  எனவே அவற்றைக் கட்டுப்படுத்த சட்ட அமலாக்க முகமைகள் பலப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அனைத்து நாடுகளின் சட்டங்களும் ஒருங்கிணைந்து செயலாற்றும்போது எல்லை தாண்டிய குற்றங்களுக்கு விரைந்த நீதி வழங்கல் சாத்தியமாகும் என்றும் அவர் கூறினார். மற்ற நாடுகளின் சட்டங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படாமல் எந்த நாடும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று அவர் கூறினார்.

இன்றைய தொழில்நுட்ப சகாப்தத்தில், நீதி வழங்குவதை உறுதி செய்வதற்கான ‘ஒத்துழைப்பு’ மற்றும் ‘ஒருங்கிணைப்பு’ ஆகியவை முக்கிய மந்திரமாக இருக்க வேண்டும் என்று கூறினார். மாறிவரும் இன்றைய சூழ்நிலையில், நீதித்துறையும் மாற வேண்டும் என்று கூறினார்.

எல்லை தாண்டிய வழக்குகளைக் கருத்தில் கொண்டு, நீதிக்கான முழு செயல்முறையிலும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு பின்பற்றப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

19 ஆம் நூற்றாண்டின் சட்டங்களை கொண்டு 21 ஆம் நூற்றாண்டில் நீதியை வழங்க முடியாது என்று அவர் கூறினார். மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் முழுமையாக அமல்படுத்தப்பட்டவுடன், இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பு உலகின் மிக மேம்பட்ட குற்றவியல் நீதி அமைப்பாக மாறும் என்று தெரிவித்தார்.

Tags: Amith sha
Share
Tweet
SendShare
Previous Post

ஜார்கண்டில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு : தப்புமா சம்பாய் சோரன் அரசு?

Next Post

விண்வெளி செல்லும் பெண் ரோபோ! – ஜிதேந்திர சிங்

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies