கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அறிவிப்பு!
Jun 14, 2026, 10:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அறிவிப்பு!

பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் : எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை!

Murugesan M by Murugesan M
Feb 10, 2024, 11:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் இம்ரான் கானை ஆதரிக்கும் சுயேட்சை வேட்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்ற நிலையில் அங்கு எந்த கட்சிக்கும்  தனி மெஜாரிட்டி கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 8-ந்தேதி நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் சிறையில் உள்ள இம்ரான் கானின் கட்சி போட்டியிடு தடை விதிக்கப்பட்டிருந்தது.  இதனையடுத்து அவரது ஆதரவாளர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர். வாக்கு  எண்ணிக்கை முடிந்து முடிவுகள் வெளியாகியுள்ளன.

265 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் கானை ஆதரித்த சுயேச்சை வேட்பாளர்கள் 98 இடங்களையும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் கட்சி 69  இடங்களையும், பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) 51  இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

எஞ்சிய இடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர். இதனிடையே அந்நாட்டு ராணுவத்தால் நிறுத்தப்பட்ட பெரும்பாலான வேட்பாளர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்.

இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI)-ஐ ஆதரிக்கும் சுயேச்சை  வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்த போதிலும்,  நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் முஸ்லீம் கட்சி தனிப்பெரும் கட்சியாக  உருவெடுத்துள்ளது.

எனினும், இந்த அறிவிப்பை ரத்து செய்ய கோரி சில இடங்களில் அரசியல் கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பல இடங்களில் வன்முறை வெடித்தது. அரசு வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டது. அவர்களை கலைக்க போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனிடையே அண்டை நாடுகளுடனான உறவை மேம்படுத்த தனது அரசாங்கம்  முயற்சிக்கும் என பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) தலைவர் நவாஸ் ஷெரீப்  தெரிவித்துள்ளார்.மற்ற கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 336 இடங்களில் 266 இடங்கள் மட்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவை. எஞ்சிய 70 இடங்கள் வெற்றி பெற்ற கட்சிகளின் பெரும்பான்மைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கப்படும். ஒட்டுமொத்தமாக 169 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சியில் அமரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: election resultsimran khannawaz sharifPakistan Muslim LeaguePakistan Tehreek-e-Insafgeneral elections
ShareTweetSendShare
Previous Post

புரோ கபடி : ஹரியானா அணி அபார வெற்றி !

Next Post

பேருந்து இல்லாததால் பயணிகள் சாலை மறியல் : சென்னை முழுவதும் போராட்டம் வெடிக்கும் என அண்ணாமலை எச்சரிக்கை!

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies