துபாய் சிவில் பாதுகாப்பு துறை, உலகின் முதல் நிலையான மொபைல் மிதக்கும் தீயணைப்பு நிலையத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
துபாய் சிவில் பாதுகாப்பு துறை, உலகின் முதல் நிலையான மொபைல் மிதக்கும் தீயணைப்பு நிலையத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பாதுகாப்பு உள்கட்டமைப்பு மற்றும் கண்டுபிடிப்புகள் துறையின் தலைமையை மேம்படுத்தும் நடவடிக்கையாக உள்ளது.
துபாயின் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளை தொடர்ந்து மேம்படுத்துவதற்கும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உயர்த்துவதற்கும் இந்த உத்தியை பயன்படுத்தியுள்ளது.
புதிய மொபைல் மிதக்கும் தீயணைப்பு நிலையம், தீயணைப்பு நடவடிக்கைகளை பாதுகாப்பதில் அதிக திறன் கொண்ட மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் விரைவான சேவையை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது அவசரகால கடல்சார் பதிலளிப்பு வழிமுறைகளை மாற்றும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மிதக்கும் தீயணைப்பு நிலைய கட்டமைப்பு பாரம்பரிய கடல் தீயணைப்பு நிலையங்களை விட 70% செலவு குறைந்ததாக உள்ளது அதேபோல் சுற்றுச்சூழலுக்கு தீங்கற்றதாக உள்ளது.
துபாய் சிவில் பாதுகாப்பு இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் நிபுணரான ரஷீத் தானி அல் மத்ரூஷி கூறியதாவது, “உலகில் முதல் முறையாக பாதுகாப்பு அமைப்பாக மாறுவதற்கான எங்கள் தேடலில் நடமாடும் மிதக்கும் தீயணைப்பு நிலையத்தை நிறுவுவது ஒரு பெரிய முன்னேற்றமாகும்.
இந்த நிலையத்தின் திறப்பு, அதிநவீன பாதுகாப்பு தீர்வுகளை உருவாக்குவதில் எங்களின் அர்ப்பணிப்பு மற்றும் பொதுவாக துபாயின் உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான எங்கள் விருப்பத்திற்கு ஒரு சான்றாகும். மேலும் இது நமது கடல் தீயணைப்பு திறன்களை கணிசமாக மேம்படுத்துகிறது ” என்று கூறியுள்ளார்.