டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், பணியில் ஈடுபடுத்தப்படிருந்த இராணுவக் காவலர் படைப் பிரிவின் சம்பிரதாய படை மாற்றத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பார்வையிட்டார்.
இதில், சீக்கிய ரெஜிமெண்டின் 6-வது பட்டாலியன், இராணுவ காவலர் பட்டாலியனாக அதன் பதவிக்காலம் முடிந்ததும், 5-வது கூர்கா ரைபிள்ஸின் 1-வது பட்டாலியனிடம் பொறுப்பை ஒப்படைத்தது.
நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேசியதாவது :, சீக்கிய ரெஜிமெண்டின் 6-வது பட்டாலியனைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் வீரர்கள் இராணுவ பாரம்பரியத்தின் மிக உயர்ந்த தரத்தைப் பின்பற்றி, குடியரசுத் தலைவர் மாளிகையில் முழு அர்ப்பணிப்புடன் தங்கள் கடமையை நிறைவேற்றியதற்காக பாராட்டு தெரிவித்தார்.
மேலும், 5-வது கோர்கா ரைபிள்ஸின் 1-வது பட்டாலியனை வரவேற்ற அவர், குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர்கள் புதிய சாதனை படைப்பார்கள் என்று கூறினார்.
இராணுவத்தின் பல்வேறு காலாட்படை பிரிவுகள் சுழற்சி முறையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் சம்பிரதாய இராணுவ காவலராக செயல்படுகின்றன. முக்கிய நிகழ்ச்சிகளான மாவீரர்களுக்கு மரியாதை செலுத்துதல், குடியரசு தின அணிவகுப்பு, சுதந்திர தின அணிவகுப்பு போன்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் இராணுவ காவலர் பட்டாலியன், குடியரசுத் தலைவர் மாளிகையில் சம்பிரதாய ரீதியான காவல் பணிகளை ஆற்றி வருகிறது.