சென்னையில் ஆர்எஸ்எஸ் சார்பில் நடைபெற்ற சக்தி சங்கமம் நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் சக்தி சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தேசத் தலைவர்களின் படங்கள் அலங்கரிக்கப்பட்டு புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் ஆர்எஸ்எஸ் ஸ்வயம்சேவகர்கள் தங்கள் குடுமபத்தினருடன் பங்கேற்றனர். பின்னர் கோ பூஜை நடைபெற்றது. அதன் சிறப்புகள் குறித்து அப்போது விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
பின்னர் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பல முக்கிய தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர். மேலும், பாரம்பரிய விளையாட்டுகளான பல்லாங்குழி, பரமபதம், தாயம் உள்ளிட்ட விளையாட்டுகளை விழாவுக்கு வந்திருந்த குழந்தைகள்,பெண்கள் விளையாடி மகிழ்ந்தனர்.
மேலும் புத்தக கண்காட்சி, நாட்டு மருத்துவம், பாட்டி வைத்தியம், தொடர்பான அரங்கமும் அமைக்கப்பட்டிருந்தன. இதனை ஏராளமானோர் கண்டுகளித்தனர். விழாவில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.