மேற்கு ஆசியாவின் மிகப்பெரிய அபுதாபி இந்து கோயில் சிறப்புகள்!
Jul 31, 2026, 07:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேற்கு ஆசியாவின் மிகப்பெரிய அபுதாபி இந்து கோயில் சிறப்புகள்!

Murugesan M by Murugesan M
Feb 13, 2024, 11:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அபுதாபி சென்றுள்ள பிரதமர் மோடி மேற்கு ஆசியாவின் மிகப்பெரிய இந்து கோயிலை நாளை திறந்து வைக்கிறார். அந்த கோயிலின் சிறப்புக்கள் குறித்த பார்ப்போம்.

பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 14 ஆம் தேதி அபுதாபியில் ஐகானிக் BAPS இந்து கோயிலை திறந்து வைக்கிறார். ஆன்மிகத் தலைவர் மஹந்த் சுவாமி மகராஜ், மத்திய கிழக்கின் முதல் பாரம்பரிய இந்து கோயிலின் திறப்பு விழாவுக்குத் தலைமை தாங்குகிறார்.

அபு முரைக்கா பகுதியில் அமைந்துள்ள இக்கோயில் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இளஞ்சிவப்பு ராஜஸ்தான் மணற்கல் மற்றும் வெள்ளை இத்தாலிய மார்பிள் கல் இந்தியாவில் செதுக்கப்பட்டு பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்  நன்கொடையாக வழங்கிய 13.5 ஏக்கரில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அங்கு சென்ற போது நிலத்தை தானமாக வழங்கினார்.

கோவிலின் ஏழு கோபுரங்கள் ஒவ்வொன்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எமிரேட்டைக் குறிக்கிறது.32.92 மீட்டர் (108 அடி) உயரம், 79.86 மீட்டர் (262 அடி) நீளம் மற்றும் 54.86 மீட்டர் (180 அடி) அகலத்தில் இந்த கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பண்டைய இந்து வேதங்களான ஷில்பா சாஸ்திரங்களின் அடிப்படையில் கட்டுமான பணிகள் நடைபெற்றுள்ளன.

இந்த கோயிலுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் 2019 ஜனவரியில் மேலும் 13.5 ஏக்கரை ஒதுக்கியது. மேற்கு ஆசியாவின் மிகப்பெரிய இந்து கோயிலாக அமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான கோயிலில் ஒரே நேரத்தில் 10,000 பேர் வரை தங்கலாம். அயோத்தி ராமர் கோவில் போல், இந்த கோயிலை கட்டுமான பணிகளுக்கு இரும்பு மற்றும் எஃகு  பயன்படுத்தப்படவில்லை.

கோயிலில் தியான அறைகள், கண்காட்சி மையங்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதிகளும் உள்ளன. கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு பிப்ரவரி 12 ஆம் தேதி நல்லிணக்கத்திற்கான அடையாள யாகம் நடைபெற்றது.

 

Tags: ModiAbu Dhabi templefirst Hindu temple in the Middle EastMahant Swami MaharajAbu Mureikhah
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 65.97 அடியாக குறைந்தது!

Next Post

மைசூரு-பெங்களூரு விரைவுச்சாலை : தொழில்நுட்ப வாயிலாக சுங்கக் கட்டணம் வசூல்!

Related News

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது – டி.கே.சிவகுமார்

முன்ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு – தமிழக அரசு கேவியட் மனுத்தாக்கல்!

மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை – மத்திய அரசு விளக்கம்!

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை – மக்களவையில் நிறைவேறியது மசோதா!

நாட்டின் தேர்வு முறையை மேலும் வலுப்படுத்த தொடர் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

Load More

அண்மைச் செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies