ஜம்மு காஷ்மீர் செல்லும் பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி வரும் 20ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜயநகரில் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்) திறப்பு விழா உள்ளிட்ட மெகா திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.
ரோஸ்கார் மேளாவில் பங்கேற்கும் பிரதமர், ஒரு லட்சம் பேருக்கு பணி நியமனக்கடிதங்களை வழங்கிறார். மேலும் பல்வேறு நலத்திட்டப்பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மத்திய அமைச்சர்கள் டாக்டர் ஜிதேந்திர சிங் மற்றும் அஷ்வினி குமார் சவுபே ஆகியோர் ஜம்முவில் உள்ள எல்லை பாதுகாப்பு படை தலைமையகமான பலூராவில் வேலை விநியோக மேளாவில் கலந்து கொள்ள உள்ளனர்.
ஸ்ரீநகரில் நடைபெறும் ரோஸ்கர் மேளாவில் மத்திய ஆயுஷ், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் மகேந்திர முஞ்ச்பரா கலந்து கொள்கிறார், அதே நேரத்தில் மத்திய விவசாயம் மற்றும் பண்ணை நலத்துறை இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி லேவில் நடைபெறும் ரோஸ்கர் மேளாவில் இளைஞர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்குகின்றனர். ஜம்மு காஷ்மீரில் 370 வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு அங்கு நடைபெறும் முதல் முறையாக தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.