ஹைதராபாத் தொகுதியில் மாதவி லதாவுக்கு பாஜக வாய்ப்பு : ஓவைசிக்கு சிக்கல்!
Oct 29, 2026, 11:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹைதராபாத் தொகுதியில் மாதவி லதாவுக்கு பாஜக வாய்ப்பு : ஓவைசிக்கு சிக்கல்!

Murugesan M by Murugesan M
Mar 3, 2024, 06:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஹைதராபாத் மக்களவை தொகுதியில் AIMIM கட்சி தலைவர் ஓவைசிக்கு எதிராக பாஜக சார்பில் மாதவி லதாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி  வெளியிட்டது. அதில் தெலுங்கானா மாநிலம்  ஹைதராபாத் தொகுதியில்  விரிஞ்சி மருத்துவமனை தலைவர் கொம்பெல்லா மாதவி லதாவு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மாதவி லதா, ஹைதராபாத்தின் சமூக-அரசியல் நிலப்பரப்பில் ஒரு முக்கிய நபராக உள்ளார். நிஜாம் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர், கோட்டி மகளிர் கல்லூரியில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள பழைய நகரப் பகுதியில் கலாச்சார பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான பணிகளில் அவர்  தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில்,தமக்கு வாய்ப்பு அளித்த பாஜக தலைமைக்கு மாதவி லதா நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், ஹைதராபாத் மக்களவை தொகுதியில் தூய்மை, கல்வி, சுகாதார வசதிகள் எதுவும் இல்லை. மதரஸாக்களில் குழந்தைகளுக்கு உணவு கிடைப்பதில்லை. கோவில்கள் மற்றும் இந்துக்களின் வீடுகள் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்படுகின்றன.

முஸ்லிம் குழந்தைகளுக்கு கல்வி, வீடு, எதிர்காலம் இல்லை. தற்போதைய எம்பி தொகுதி மக்களுக்காக எதுவும் செய்யவில்லை.  ஹைதராபாத் நகரின் மையத்தில் இருந்தாலும் அங்கே வறுமை இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய வாக்காளர்கள் நிறைந்த ஹைதராபாத் தொகுதியில் ஓவைசி தற்போது எம்பியாக உள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டு முதல் இந்த  தொகுதியில் எம்பியாக உள்ள அவர், 2024 தேர்தலிலும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பகவந்த் ராவை சுமார் 2, 82,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஓவைசி வீழ்த்தினார். ஆனால் தற்போது தேர்தல் களம் மாறியுள்ளது.

அவர் பெரிதாக தொகுதிக்கு எந்த நலத்திட்டங்களையும் செய்வதில்லை என்று குற்றச்சாட்டு வாக்காளர்கள் மத்தியில் உள்ளது.  எனவே இந்த தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிக அளவில் உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகிறது.

Tags: Bharatiya Janata PartyKompella Madhavi LathaVirinchi Hospital chairpersonTelanganaHyderabadLok Sabha elections.
Share
Tweet
SendShare
Previous Post

புதிய தகவல் பரிமாற்ற முறையைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

Next Post

காஷ்மீரில் பனிப்பொழிவில் சிக்கி தவித்த மலையேற்ற வீரர்கள் பத்திரமாக மீட்பு!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies