பேயாட்சிக்கு திமுக அரசே சாட்சி! - அண்ணாமலை விமர்சனம்
Oct 8, 2026, 03:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேயாட்சிக்கு திமுக அரசே சாட்சி! – அண்ணாமலை விமர்சனம்

Murugesan M by Murugesan M
Mar 5, 2024, 01:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

“கொள்ளை, மணல் கடத்தல், சாராயம் விற்பனை, கஞ்சா விற்பவர்களுக்குதான் தமிழகத்தில் தற்போது முதல் மரியாதை கிடைக்கிறது” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார்.

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.  இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் பேசிய அண்ணாமலை,

“பிரதமர் மோடி சென்னைக்கு பலமுறை வந்திருந்தாலும், இம்முறை தன்னுடைய குடும்பத்தை பார்க்க வந்திருக்கிறார். மோடிக்கு குடும்பம் இல்லை என்று பிஹாரில் லாலு பிரசாத் யாதவ் சொல்கிறார். மோடி தனிமனிதன் என்கிறார்.

142 கோடி மக்கள் நாம் தான் மோடியின் குடும்பம். கோபாலபுரம் குடும்பம் மட்டும் தான் இவர்களின் கண்களுக்கு தெரியும். பிஹாரில் தொடர்ச்சியாக ஒரே குடும்பம் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று நினைக்க கூடியது லாலு பிரசாத் யாதவ் குடும்பம்.

17 வயதில் வீட்டை பிரிந்து, இந்தியா முழுவதும் சுற்றி திரிந்து இன்றைக்கு கிட்டதட்ட ஒரு யோகியாக தன் வாழ்க்கை முழுவதும் மக்களுடைய முன்னேற்றுத்துக்காக அர்ப்பணித்த மோடிக்கு 142 கோடி மக்களும் தான் குடும்பம். கோபாலபுர குடும்பத்தையும் நான்காவது தலைமுறைகளாக அரசியலில் இருக்கும் திமுகவின் சிற்றரசர்களையும் அரசியலில் இருந்து அகற்ற வேண்டியது நேரமிது. இந்தத் தேர்தல் நமக்கு அருமையான வாய்ப்பு.

இன்றைக்கு காஞ்சிபுரத்தில் நெய்த பட்டு சால்வை அணியப்பட்டது. இந்த சால்வையில் சிறுத்தை அச்சிடப்பட்டுள்ளது. இன்றைக்கு மக்களுக்கு மட்டுமல்ல, வாய் பேச முடியாத ஜீவன்களுக்காகவும் பிரதமர் மோடி பாடுபட்டு கொண்டிருக்கிறார். 2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்தபோது 7910 சிறுத்தைகள் இருந்தன.

அதுவே இன்று 13,874 சிறுத்தைகள் உள்ளன. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே சால்வையில் சிறுத்தை அச்சிடப்பட்டுள்ளது. சுயசார்பு பாரதம் திட்டம் கொண்டுவந்ததற்காக பனை மர பொருட்கள் பரிசளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியலை அடிப்படையில் இருந்து மாற்றியவர் பிரதமர் மோடி. ஒரு நேர்மையான அரசியலை இந்திய ஜனநாயகத்தில் கொடுக்க முடியும் என்று காட்டியுள்ளார். அவரின் வெற்றியில் யாருக்கும் சந்தேகம் இல்லை. மக்களவைத் தேர்தலில் உறுதியாக 400 தொகுதிக்கும் மேல் வெல்வார். 400+ தொகுதிகளை வெற்றிபெறும் போது தமிழகத்தில் இருந்து 39 எம்பிக்களை அனுப்பிவைக்க வேண்டும். இதற்கு சபதம் ஏற்போம்.

தமிழகத்தில் இன்றைக்கு நடக்கக் கூடிய திமுக ஆட்சியை, “பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்” என்று பாஞ்சாலி சபதத்திலேயே மகாகவி பாரதி சொல்லியிருக்கிறார். ஒரு பேய் ஆட்சி செய்தால் அந்த நாடு எப்படியிருக்கும் என்பதற்கு இன்றைய திமுகவின் ஆட்சியே சாட்சி.

கொள்ளை, மணல் கடத்தல், சாராயம் விற்பனை, கஞ்சா விற்பவர்களுக்கு தான் தமிழகத்தில் தற்போது முதல் மரியாதை கிடைக்கிறது. சாதாரண மக்களுக்கு மரியாதை கிடைப்பதில்லை. இந்த ஆட்சியை அகற்ற வேண்டிய நேரமும் காலமும் வந்துவிட்டது.

அடுத்த 60 நாட்கள் இந்திய அரசியலில் முக்கியமான நாட்கள். நேற்றைய மந்திரி சபை கூட்டத்தில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டத்தை அறிவித்துள்ளார் பிரதமர் மோடி. அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டங்களை கையில் வைத்துள்ளார் பிரதமர். அதற்கான அடித்தளத்தை 2024 தேர்தலில் அமைக்க தயாராக இருக்கிறார்” என்று தெரிவித்தார்.

Tags: bjp k annamalaibjp meeting
Share
Tweet
SendShare
Previous Post

அருணாச்சல பிரதேசம் : பாஜகவில் இணைந்த காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவர்!

Next Post

கருப்புப் பணத்தை மறைக்க அயல்நாடுகளில் வங்கிக்கணக்கு தொடங்கும் எதிர்கட்சி தலைவர்கள் : பிரதமர் மோடி

Related News

ரஷ்யாவில் 70,0000 இந்தியர்களுக்கு பணிவாய்ப்பு : ஏற்றுமதியை அதிகரிக்கவும் மத்திய அரசு வியூகம் – சிறப்பு தொகுப்பு!

முடிவுக்கு வரும் ரஷ்யா- உக்ரைன் போர்? : பிரதமர் மோடி முன்முயற்சி, அதிபர் புதின் பாராட்டு – சிறப்பு தொகுப்பு!

தலைமை தேர்தல் ஆணையர் செயல்பாட்டில் ராகுல் என்ன குறை கண்டார் – நயினார் கேள்வி!

வெற்றிப் பயண திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு – தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் வேதனை!

சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!

பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு – மேலும் இருவர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

25 ஆண்டுகள் அரசு தலைமைப் பொறுப்பில் இருப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை – பிரதமர் மோடி

மக்கள் சேவையில் 25 ஆண்டுகள் – பிரதமர் மோடிக்கு அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

நல்லாட்சி வழங்கியிருந்தால் நீண்ட பரப்புரையில் முதல்வர் ஈடுபட வேண்டிய அவசியமில்லை – கவிதா ஸ்ரீகாந்த்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 மாதங்களில் 1,129 கோடி உண்டியல் காணிக்கை!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கடற்படை ஆதரவு கப்பலான சூர்யா – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்!

ஓட்டப்பிடாரம் அருகே மின்பாதை அமைக்க எதிர்ப்பு – மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம்!

மதுரையில் பாஜக பேரணிக்கு அனுமதி மறுப்பு – சசிகலா புஷ்பா குற்றச்சாட்டு!

மக்கள் சேவையில் 25 ஆண்டுகள் – விநாயகர் கோயிலில் பிரதமர் பிரதமர் மோடி வழிபாடு!

ராகுல்காந்தி நாடகத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் – கிரண் ரிஜிஜூ

தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் தேர்தல் செலவு கணக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்; தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் மனு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies