ட்ரோனால் தாக்கப்பட்ட கப்பலில் இருந்து 21 பேரை மீட்ட இந்திய கடற்படை!
Oct 29, 2026, 09:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 ட்ரோனால் தாக்கப்பட்ட கப்பலில் இருந்து 21 பேரை மீட்ட இந்திய கடற்படை!

Murugesan M by Murugesan M
Mar 7, 2024, 04:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய போர்க்கப்பலான ஐஎன்எஸ் கொல்கத்தா, ஏடன் வளைகுடாவில் ட்ரோன் தாக்குதலுக்குட்ட கப்பலில் இருந்து 21 பணியாளர்களை இந்திய கடற்படை மீட்டது.

ஏடன் வளைகுடாவில் பார்படாஸ் கொடியுடன் வந்துகொண்டிருந்த எம்/வி ட்ரூ கான்பிடன்ஸ் என்ற சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று தாக்குதல் நடத்தினர்.

ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் கப்பல் கடுமையாக சேதமடைந்தது. 3 மாலுமிகள் உயிரிழந்தனர், சிலர் காயமடைந்துள்ளனர்.

ஏமனின் துறைமுக நகரமான ஏடனில் இருந்து 54 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதற்கிடையே தாக்கப்பட்ட கப்பலில் இருந்த மாலுமிகள் மற்றும் ஊழியர்கள் என 21 பேரை, ‘ஐ.என்.எஸ். கொல்கத்தா’ போர்க்கப்பலில் சென்ற இந்திய கடற்படையினர் மீட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களுக்கு கப்பலில் உள்ள மருத்துவ குழுவினர் முதற்கட்ட சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிபூட்டி நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் ஒருவர் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏடன் வளைகுடாவில் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நிறுத்தப்பட்ட ஐஎன்எஸ் கொல்கத்தா, மாலை 4.45 மணிக்கு சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து, அதன் ஒருங்கிணைந்த ஹெலிகாப்டர் மற்றும் படகுகளைப் பயன்படுத்தி ஒரு இந்தியர் உட்பட 21 பணியாளர்களை உயிரை பணயம் வைத்து மீட்டதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் தெரிவித்தார்.

ஏடன் வளைகுடாவில் நடந்த கடல் சம்பவத்திற்கு இந்திய கடற்படை போர்க்கப்பல் விரைவாக பதிலடி கொடுத்ததாக மத்வால் கூறினார்.

கடந்த சில வாரங்களில், மேற்கு இந்தியப் பெருங்கடலில் பல வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இந்தியக் கடற்படை பல்வேறு கட்டங்களில் உதவி செய்து, பல பேர்களை மீட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Indian Navy rescues 21 people from ship attacked by drone!
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமருடன் செல்பி எடுத்த நஜீம் : யார் அந்த இளைஞர்?

Next Post

இந்திய ராணுவம் முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது! – ராஜ்நாத் சிங்

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies