ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது எப்படி? - பரபரப்பு தகவல்
Aug 6, 2026, 05:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது எப்படி? – பரபரப்பு தகவல்

Murugesan M by Murugesan M
Mar 9, 2024, 08:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக், போலீசாரால் கைது செய்யப்பட்டது எப்படி என்பது குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருளான சூடோபெட்ரினை தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் பாக்கெட்களில் மறைத்து வைத்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஒரு கும்பல் கடத்தி வந்தது.

இது தகவல் அறிந்த டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார், டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் வைத்து, சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக் குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து போதைப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் 50 கிலோ வேதி பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ 2000 கோடியாகும்.

கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்தவர் ஜாபர் சாதிக் என கண்டறிந்தனர்.

இதனையடுத்து, ஜாபர் சாதிக் 26 -ம் தேதி டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினர். அவரது வீட்டிலும் நோட்டீஸ் ஒட்டினர். ஆனால் ஜாபர் சாதிக் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

இதனால், ஜாபர் சாதிக்கை எப்படியாவது பிடித்துவிடவேண்டும் என டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே, ஜாபர் சாதிக் சிக்கியது எப்படி என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதில், ஜாபர் சாதிக் நெருங்கிய நண்பர்கள் யார் யார், உறவினர்கள் எங்கு உள்ளனர் என லிஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. அவர் அடிக்கடி செல்லுமிடம் மற்றும் தொழில் கூட்டாளிகள் உள்ளிட்டவை குறித்து ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி முக்கிய தகவல்களை பெற்றனர்.

மேலும், போலீஸ் தேடுவதால் ஜாபர் சாதிக் புதிய செல்போன் எண்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்து, ஜாபர் சாதிக் பயன்படுத்தும் புதிய செல்போன் எண்ணை கைப்பற்றினர். அந்த புதிய செல் போன் சிக்னலை வைத்து ஜாபர் சாதிக்கை போலீசார் தட்டித்தூக்கியுள்ளனர்.

Tags: How was Zafar Sadiq arrested?
Share
Tweet
SendShare
Previous Post

லோக்சபா தேர்தலில் ராகுல் தோற்பது உறுதி! – அனுராக் தாக்கூர்

Next Post

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுரேஷ் பச்சோரி பாஜகவில் இணைந்தார்!

Related News

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies