கோவை வளர்ச்சிக்கு திமுக.,வும், மார்க்சிஸ்ட் கட்சியும் தடையாக உள்ளது! - அண்ணாமலை குற்றச்சாட்டு
Jul 29, 2026, 03:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை வளர்ச்சிக்கு திமுக.,வும், மார்க்சிஸ்ட் கட்சியும் தடையாக உள்ளது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Mar 27, 2024, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எங்களுடைய போட்டி, வேட்பாளர்களுடன் கிடையாது, தமிழக வளர்ச்சியை தடுப்பவர்களுடன் தான் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை மக்களவைத் தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். கோவையில் உள்ள கோனியம்மன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு அண்ணாமலை இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,

கோவை மக்களின் அன்போடு, வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். கோவை மக்கள் அனைவரும் என் மீது அன்பை பொழிகிறார்கள். கோவையில் ஆதிக்கம் செலுத்திவந்த சக்திகளுடன் தான் பா.ஜ., போட்டி. கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நில ஒதுக்கீடு செய்வது தொடர்பாக பா.ஜ., சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் சட்டசபையில் 3 முறை பேசியுள்ளார்.

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக  87 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என  மத்திய விமானத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு 3முறை கடிதம் எழுதியுள்ளார்.

ஆனால், கோவை நகர் வளர்ச்சி அடையக்கூடாது என மாநில திமுக அரசு கங்கணம் கட்டி வருகிறது. கோவை வளர்ச்சிக்கு திமுக.,வும், மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி.,யும் தடைக்கல்லாக இருந்தது.

தொழில்துறையினரின் கோரிக்கையை கோவை எம்.பி., பேசியிருக்கிறாரா? கோவை காவல் தெய்வம் கோனியம்மனை வணங்கிவிட்டு வேட்புமனு தாக்கல் செய்தேன். கோவையில் நாங்கள் ஜெயிக்க வேண்டும் என வேண்டவில்லை, கோவை மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றே வேண்டினேன். தொகுதி மக்களின் பிரச்சனைகளை நிச்சயம் தீர்ப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்.

கரூரில் இருந்து கல்லூரி படிக்க வந்தபோது, கோவை தான் என்னை பக்குவப்படுத்தியது. இங்குள்ள 60 சதவீத மக்கள் எங்களுக்கு ஓட்டளிப்பார்கள். நீண்ட போராட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் என்ஐஏ காவல் நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் உட்பட 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக நிச்சயம் வெற்றி பெற்று, பிரதமர் மோடி மீண்டும் 3- ஆவது முறையாக பிரதமராவார் எனத் தெரிவித்தார்.

எங்களுடைய போட்டி, வேட்பாளர்களுடன் கிடையாது, தமிழக வளர்ச்சியை தடுப்பவர்களுடன் தான் எனத் தெரிவித்தார். அனைத்து மக்களின் ஆதரவும் பாஜகவுக்கு உள்ளது. கோவை குண்டுவெடிப்பில் இந்து, கிறிஸ்டின், உள்ளிட்ட எந்த மதத்தையும் பார்க்கவில்லை அனைவரும் உயிரிழந்தனர் எனத் தெரிவித்தார். தீவிரவாதத்தை எந்த விதத்திலும் எதிர்க்கிறேன் எனத் தெரிவித்தார்.

Tags: k Annamalai Bjp
ShareTweetSendShare
Previous Post

தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்!

Next Post

2024 ஐபிஎல்: மும்பை இந்தியன்ஸ் – சன் ரைசஸ் ஐதராபாத் அணிகள் மோதல்!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies