தமிழ் மொழியை கடந்த 70 ஆண்டுகளாக வியாபாரமாக்கியது திமுக! - அண்ணாமலை குற்றச்சாட்டு
Apr 30, 2026, 03:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ் மொழியை கடந்த 70 ஆண்டுகளாக வியாபாரமாக்கியது திமுக! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Mar 30, 2024, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பல மொழிகள் பேசுபவர்கள் மத்தியிலும், ஏன், ஐநா சபையில் பேசும்போது கூட, உலகின் தொன்மையான மொழியான தமிழ், என் நாட்டின் மொழி என்று பெருமையுடனேயே பிரதமர் மோடி கூறியிருக்கிறார் என முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதில் தெரிவித்துள்ளார்.

திமுக காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்தைச் சேர்ந்த 80 மீனவர்கள், கொல்லப்பட்டனர் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

வழக்கம்போல, எதிர்க்கட்சியாக இருக்கும்போதும், தேர்தல் நடைபெறும் நேரங்களிலும் மட்டுமே திமுகவினருக்கு வரும் தமிழ் உணர்வு, தற்போது பாராளுமன்றத் தேர்தல் நேரத்திலும் வந்திருப்பது ஆச்சரியமில்லை.

கடந்த 70 ஆண்டுகளாக, தமிழ் மொழியை வியாபாரமாக்கித் தமிழகத்தைச் சுரண்டிக் கொழுத்த திமுகவின் தமிழுணர்வு நாடகத்தை, தமிழக மக்கள் இனியும் நம்புவார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் நினைப்பாரேயானால், அவருக்கு ஏமாற்றமே பரிசாகக் கிடைக்கும்.

தமது தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என்றும், தமிழ் மொழி கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறித்தும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்திருந்ததை, முதலமைச்சர் ஸ்டாலின் கேலி செய்திருக்கிறார்.

நமது பிரதமர் மோடி, இன்று, நேற்று இதனைக் கூறவில்லை. திமுகவினரைப் போல, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களைப் போல, ஸ்டாலின் அவர்களைப் போல, மொழியை வைத்து நடத்தும் வியாபார அரசியலைச் செய்ய வேண்டிய அவசியம், பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இல்லை. அவர் இந்தியாவின் பிற மொழிகள் பேசுபவர்கள் மத்தியிலும், தமிழ் மொழி தான் தொன்மையான, இனிமையான மொழி என்று பெருமையுடன் கூறி வருகிறார்.

பல ஆண்டுகளாக, இந்தியாவின் பல மாநிலங்களில் பேசும்போதும், உலக அரங்கில் பல நாடுகளில் பேசும்போதும், பல மொழிகள் பேசுபவர்கள் மத்தியிலும், ஏன், ஐநா சபையில் பேசும்போது கூட, உலகின் தொன்மையான மொழியான தமிழ், என் நாட்டின் மொழி என்று பெருமையுடனேயே கூறியிருக்கிறார்.

வழக்கம்போல, எதிர்க்கட்சியாக இருக்கும்போதும், தேர்தல் நடைபெறும் நேரங்களிலும் மட்டுமே திமுகவினருக்கு வரும் தமிழ் உணர்வு, தற்போது பாராளுமன்றத் தேர்தல் நேரத்திலும் வந்திருப்பது ஆச்சரியமில்லை. கடந்த 70 ஆண்டுகளாக, தமிழ் மொழியை வியாபாரமாக்கித் தமிழகத்தைச் சுரண்டிக் கொழுத்த திமுகவின்… https://t.co/BeLIZZxD30

— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 30, 2024

தமிழ் மொழியின் பெருமையை, தமிழகத்தின் பெருமையை, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உலக நாடுகளின் தலைவர்கள் மத்தியில் கொண்டு சென்றிருக்கிறார். உலக நாடுகளின் தலைவர்களைத் தமிழகத்திற்கு அழைத்து வந்து, தமிழகத்தின் தொன்மையான கலாச்சாரத்தை பறைசாற்றியிருக்கிறார்.

எனவே, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மீது கொண்டுள்ள பற்றுக்கும், தமிழகத்தின் மீது கொண்டுள்ள அன்புக்கும், முதலமைச்சர் ஸ்டாலினின் சான்றிதழ் அவசியமில்லாதது. அர்த்தமற்றது. ஆகாசவாணி என்பது, பிரசார் பாரதி நிறுவனத்தின் வானொலிப் பிரிவின் பெயர். இன்று நேற்றல்ல. சுமார் 70 ஆண்டுகளாக, ஆகாசவாணி என்பதாகத்தான் இருக்கிறது.

ஸ்டாலின் இன்று எதிர்க்கட்சியாக, தேர்தல் நேரத்தில் மட்டுமே காட்டும் தமிழ் ஆர்வத்தில் சிறிதேனும், பத்து ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில், பசையான பதவிகளை அனுபவித்துக் கொண்டிருந்தபோது காட்டியிருந்தால், தமிழக மக்கள் இந்த நாடகத்தை நம்பியிருப்பார்கள். எனவே தேர்தல் நேர நாடகங்களை நிறுத்திவிட்டு, உண்மையாகவே  ஸ்டாலின் அவர்களுக்கு, தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால், தாய்மொழிக் கல்வியை வலியுறுத்தும், தேசியக் கல்விக் கொள்கையை தமிழகப் பள்ளிகளில் அமல்படுத்தி, தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளில் பயிலும் அனைத்துக் குழந்தைகளும், கட்டாயமாக தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பினை வழங்க முன்வர வேண்டும்.

ஸ்டாலின், மீனவர்கள் பாதுகாப்பு குறித்துக் கவலைப்பட, இது திமுக காங்கிரஸ் கூட்டணியின் ஊழல் அரசு அல்ல. திமுக காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்தைச் சேர்ந்த 80 மீனவர்கள், கொல்லப்பட்டனர். ஆனால், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில், மீனவர்கள் உயிருக்குப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதோடு மட்டுமின்றி, இலங்கை அரசால் கைது செய்யப்படும் தமிழக மீனவ சகோதரர்கள் உடனுக்குடன் மீட்கப்படுகின்றனர்.

எனவே  ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றப்படாமல் இருக்கும், மீனவர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கருப்புப்பணம் மீட்டிருப்பது குறித்து பொதுமக்கள் நன்கு அறிவார்கள். ஸ்டாலின் அவர்களுக்குத் தெரியவில்லை என்றால், தனது கட்சியினரிடமும், தனது இந்தி கூட்டணிக் கட்சியினரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். மேலும், ஊழல் ஒழிப்பு குறித்து ஸ்டாலின் அவர்கள் கேள்வி கேட்பதை, தமிழக மக்களின் வார இறுதி நகைச்சுவைக்காக விட்டுவிடுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: k annamalaistalin
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் இயல்பைவிட வெப்பத்தின் அளவு அதிகரிக்கும்: வானிலை மையம்

Next Post

ஐ.நா.வுக்கு குடியரசுத் துணைத் தலைவர் பதிலடி..!

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies