இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் காங்கிரஸ் எதிரானவர்கள் என கச்சத்தீவு விவகாரம் குறித்து மத்திய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளனர்.
1976ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது கச்சத்தீவு கைமாறியதாகவும், இது பற்றிய முழு விவரம் 1974 ஜூன் மாதம் அன்றைய முதல்வர் கருணாநிதிக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “காங்கிரஸ் மனம் அறிந்து கச்சத்தீவை விட்டுக் கொடுத்தார்கள். அதைப் பற்றி அவர்கள் சிறிதும் கவலைப்படவில்லை.
Slow claps for Congress!
They willingly gave up #Katchatheevu and had no regrets about it either. Sometimes an MP of the Congress speaks about dividing the nation and sometimes they denigrate Indian culture and traditions. This shows that they are against the unity and integrity…— Amit Shah (Modi Ka Parivar) (@AmitShah) March 31, 2024
சில சமயங்களில் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம் பாரத நாட்டைப் பிரிப்பது பற்றிப் பேசுகிறார்கள், சில சமயங்களில் இந்தியக் கலாச்சாரம் மற்றும் மரபுகளை இழிவுபடுத்தியும் பேசுகிறார்கள். அவர்கள் இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரானவர்கள் என்பதை இது காட்டுகிறது. அவர்கள் நம் தேசத்தைப் பிரிக்க விரும்புகிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
இதேபோல் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா கச்சத்தீவை எப்படி இழந்தது ! இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் மீதான காங்கிரஸின் அக்கறையின்மையை இது அம்பலப்படுத்துகிறது. நமது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் நம்ப முடியாது” என பதிவிட்டுள்ளார்.
How India lost #Katchatheevu Island under Congress rule! This news story exposes Congress’ apathy towards India’s unity and territorial integrity. The Congress party can never be trusted with our nation’s integrity. https://t.co/oV1zQVx8Eu
— Rajnath Singh (मोदी का परिवार) (@rajnathsingh) March 31, 2024