கச்சத்தீவு விவகாரத்தில் பொறுப்பற்ற வகையில் நடந்து கொள்ளும் திமுக, காங்கிரஸ் : அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்
Sep 12, 2026, 01:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கச்சத்தீவு விவகாரத்தில் பொறுப்பற்ற வகையில் நடந்து கொள்ளும் திமுக, காங்கிரஸ் : அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்

Murugesan M by Murugesan M
Apr 1, 2024, 12:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் பொறுப்பற்ற வகையில் நடந்து  கொள்வதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1974ம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்த ஒப்பந்தம் கையெழுத்தான போது இந்திய மீனவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 1976ல் இருநாடுகளுக்கு இடையே கையெழுத்தான மற்றொரு ஒப்பந்தத்தில் மீனவர்களின் உரிமை மறுக்கப்பட்டது என தெரிவித்தார்.

கடந்த 20 ஆண்டுகளில், 6184 இந்திய மீனவர்கள் இலங்கையால் தடுத்து  வைக்கப்பட்டுள்ளனர்.  1175  மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளில் கச்சத்தீவு பிரச்சினை மற்றும் தமிழக  மீனவர் பிரச்சினை தொடர்பாக  பல்வேறு கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. இதுதொடர்பாக அப்போதைய தமிழக முதல்வர் எனக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தற்போதைய முதல்வருக்கு 21 முறை பதில் அளித்துள்ளேன். இது திடீரென்று தோன்றிய பிரச்சினை அல்ல.  மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே கடிதப் பரிமாற்றம் நடந்துள்ளது. தற்போது தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியும் இதைப் பற்றி ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளன என்றும் அவர் கூறினார்.

இந்த விவகாரம் பொதுமக்களின் பார்வையில் இருந்து நீண்ட காலமாக  மறைக்கப்பட்டுள்ளது.தங்களுக்கு பொறுப்பு இல்லை என்கிற வகையில் திமுக, காங்கிரசும் பேசுகிறது. கச்சத்தீவு தொடர்பான உண்மைகளை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். கச்சத்தீவு ஒப்பந்தத்தை யார் மறைத்தார்கள் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என ஜெய்சங்கர் தெரிவித்தார்.

Tags: Katchatheevu.Katchatheevu agreementTamil Nadusri lankaEAM S Jaishankar
Share
Tweet
SendShare
Previous Post

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்!

Next Post

வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies