மக்களைவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, தேர்தல் விதிமுறைகளைத் தேர்தல் ஆணையம் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது.
குறிப்பாக, வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பது, பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பழனி தலைமையில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த ஒருவரை மடக்கி சோதனை செய்தபோது, அவரிடம் உரிய ஆவணமின்றி ரூ.3 லட்சம் இருந்தது.
இதுபோல், சென்னை ராயபுரம் மேம்பாலம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி குறிஞ்சி முருகன் தலைமையில் வாகன சோதனையில், சந்தேக நபரிடம் ரூ. 3 லட்சம் இருந்தது.
இருவரிடமும், உரிய ஆவணம் இல்லாததால் ரூ. 6 லட்சம் ரொக்கப் பணத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.