மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணிகளில் முன்னாள் படைவீரர்கள் சிறப்புக் காவலர்களாக ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதற்கு சென்னை மாவட்டத்தை சார்ந்த 65 வயதுக்குள்பட்ட உடல் ஆரோக்கியமுள்ள அனைத்து முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் இதர தரத்திலுள்ள முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்.
உரிய தகுதியுடைய முன்னாள் படைவீரர்கள் ‘சென்னை மாவட்டம் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகம், சைதாப்பேட்டை, சென்னை-15’ எனும் முகவரியை அணுகி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் முன்னாள் படைவீரர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்படும். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு 044-2235 0780 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.