சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக எம்.எல்.ஏ. மற்றும் எம்.பிகளுக்கு எதிரான வழக்கு விவரங்கள் குறித்து, தமிழக அரசு முக்கியத் தகவலை தெரிவித்துள்ளது.
தமிழக எம்.எல்.ஏ. மற்றும் எம்பிகளுக்கு எதிரான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழகத்தில் உள்ள எம்.எல்.ஏ. மற்றும் எம்.பிக்கள் மீது, இந்திய தண்டனை சட்டப் பிரிவின்படி 561 வழக்குகளும், ஊழல் டுப்பு சட்டத்தின்கீழ் 20 வழக்குகளும் உள்ளன என்றும், ஒன்பது வழக்குகள் சாட்சி விசாரணை முடியும் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தற்போது, திமுக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், செந்தில் பாலாஜி, பொன்முடி, ஐ.பெரியசாமி உள்ளிட்ட பலர் மீதும் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.