அலெக்சா மூலம் குரங்கை விரட்டிய சிறுமி : ஆனந்த் மஹிந்திரா கொடுத்த கிப்ட்!
Oct 28, 2026, 01:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அலெக்சா மூலம் குரங்கை விரட்டிய சிறுமி : ஆனந்த் மஹிந்திரா கொடுத்த கிப்ட்!

Murugesan M by Murugesan M
Apr 7, 2024, 07:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உத்தர பிரதேசத்தில் குழந்தையைத் தூக்க வந்த குரங்கிடம் இருந்து, தப்பித்துக் கொள்ள கூகுள் அலெக்சாவை நாயைப் போல குரைக்க வைத்து சமயோசிதமாக செயல்பட்ட சிறுமிக்கு, எதிர்காலத்தில் தனது நிறுவனத்தில் வேலை வாய்ப்பு தருவதாக, மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.

மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, தனது சமூக வலைத்தளக் கணக்குகளில், ஆக்கப்பூர்வமான விஷயங்களை பதிவிடுவார்.   இவருடைய பதிவுகள் எப்போதும் தனிச் சிறப்பு வாய்ந்தது.

இவர் எளிய மனிதர்களின் சாதனைகளை ஊக்குவிக்கும் உயர் குணம் கொண்டவர். ஏழை குடும்பத்தில் பிறந்து சாதிக்கும் பலரை பாராட்டி, அவர்களை தன்னுடைய நிறுவனத்திலேயே பணிக்கு அமர்த்துவார்.

இந்த நிலையில், குழந்தையைத் தூக்க வந்த குரங்கிடம்  இருந்து, சமயோசிதனமாக செயல்பட்டு, குழந்தையை காப்பாற்றிய 13 வயது சிறுமிக்கு, எதிர்காலத்தில் தனது நிறுவனத்தில் வேலை வாய்ப்பு தருவதாக, மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் அவாஸ் விகாஸ் என்ற பகுதியில், நிகிதா என்ற 13 வயது சிறுமி, தனது அக்கா குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தார். சிறுமி குழந்தையுடன் தனி அறையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென சமையல் அறைக்குள் ஒரு குரங்கு நுழைந்துள்ளது. பின்னர், குழந்தையுடன் சிறுமி விளையாடிக் கொண்டிருந்த அறைக்குள் குரங்கு நுழைந்தது.

அந்த நேரத்தில், குடும்பத்தினர் வேறொரு அறையில் இருந்ததால், குரங்கு வந்ததை யாரும் கவனிக்கவில்லை.  அப்போது, குழந்தையை நோக்கி குரங்கு சென்றுள்ளது.

அச்சமயத்தில், வீட்டின் பிரிட்ஜின் மேல் அலெக்சா சாதனம் இருப்பதைப் பார்த்த நிகிதா, அலெக்சா சாதனத்திடம் குரங்கை அச்சுறுத்தும் விதமாக சத்தம் எழுப்புமாறு கூறியுள்ளார். அதன்படி அலெக்சா நாய் குரைப்பது போன்ற ஒலியை எழுப்பியது. இதனால், பயந்து போன குரங்கு அறையை விட்டு வெளியே ஓடியது.

இந்த நிகழ்வில் சிறுமி தனது சமயோசித புத்தியால் குரங்கை விரட்டியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பல்வேறு தரப்பினரும் சிறுமியை பாராட்டி வருகின்றனர்.

Tags: uttar pradeshanand mahindraOffers JobAlexamonkeybaby
Share
Tweet
SendShare
Previous Post

ஐபிஎல் 2024 : லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பேட்டிங்!

Next Post

கிழக்கு மற்றும் தென்னிந்தியாவில் பாஜக வெற்றி பெறும் : பிரசாந்த் கிஷோர் கருத்துக்கணிப்பு!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies