மாஞ்சோலை தேயிலைத் தோட்டம்! - தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு !
Aug 8, 2026, 08:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாஞ்சோலை தேயிலைத் தோட்டம்! – தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு !

Murugesan M by Murugesan M
Jul 21, 2024, 01:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட நிர்வாகத்தை அரசு ஏற்று நடத்த சாத்தியமில்லை என தமிழக அரசின் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்ட நிறுவனத்தின் குத்தகைக் காலம் வரும் 2028ல் முடிவடைய உள்ளதால், அதற்கு முன்பாகவே பிபிடிசி நிறுவனம், தேயிலை தோட்ட தொழிலாளர்களை கட்டாய ஓய்வில் அனுப்ப முடிவு செய்தது.

இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

இதனையடுத்து மாஞ்சோலை தொழிலாளர்கள் வீடுகளை காலி செய்ய வேண்டாம் என பிபிடிசி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்தி மற்றும் குதிரைவெட்டி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் தற்போது அமைந்துள்ள எஸ்டேட்டுகளை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டதையடுத்து, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் அம்பாசமுத்திரம் துணை இயக்குனர் சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் அடிக்கடி புலம்பெயரக் கூடியவர்கள் என்றும், அவர்கள் மலையை சார்ந்து வாழக்கூடிய மக்கள் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசு ஏற்று நடத்த சாத்தியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Mancholai Tea Garden! - Madurai High Court orders to file report on behalf of Tamil Nadu Government!
Share
Tweet
SendShare
Previous Post

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் குரு பூஜை நிகழ்ச்சி!- மோகன் பகவத் பங்கேற்பு!

Next Post

தரம் குறைந்த அரிசி சப்ளை செய்தால் கடும் நடவடிக்கை! – திருமலை திருப்பதி தேவஸ்தானம்!

Related News

30 தூதரகங்களை இழுத்து மூடும் ட்ரம்ப் : செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் சீனா – சிறப்பு தொகுப்பு!

உருவானதா இஸ்லாமிய NATO? :| சவூதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் – சிறப்பு கட்டுரை!

மருத்துவத் துறையில் தன்னிறைவு – நாட்டின் முதல் MRI ஸ்கேனர் ; ZOHO & TATA நிதியுதவியுடன் தயாரித்து சாதனை – சிறப்பு கட்டுரை!

ரஷ்யா மீதான புதிய பொருளாதாரத் தடை மசோதா – அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றம்!

அசாமில் கொட்டித்தீர்க்கும் மழை – பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வு!

ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து சரிவு – அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பில் உயிரிழந்த தேச பக்தர்களுக்கு வீர வணக்கம் – நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாதவர்களே அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை – மாணிக்கம் தாகூர்

UPI கட்டணம் குறித்துப் பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் – நயினார் நாகேந்திரன்!

மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு – சட்டசபையில் மசோதா தாக்கல்!

ஜந்தர்- மந்தர் போராட்ட களத்தை ஏன் முழுமையாக மூடக்கூடாது – டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

UPI பண பரிவர்த்தனை சேவை தொடர்ந்து இலவசம் பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு விளக்கம்!

கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தக்கூடாது – வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு!

ஆடி வெள்ளி – தங்கத் தேரில் காஞ்சி காமாட்சி அம்மன் முப்பெரும் தேவியர்!

இன்று திருவண்ணாமலை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies