டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ள நீரில் சிக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரம் : 3 பேர் கைது!
Sep 3, 2026, 08:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ள நீரில் சிக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரம் : 3 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Jul 28, 2024, 02:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லியிலுள்ள ஐஏஎஸ் பயிற்சி மையத்திற்குள் புகுந்த வெள்ள நீரில் சிக்கி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில், பயிற்சி மையத்தை நடத்தியதாக ஒருங்கிணைப்பாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

டெல்லி முழுவதும் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பழைய ராஜேந்தர் நகர் பகுதியில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்திற்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் செயல்பட்டு வரும் நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். இதில், 2 மாணவிகள், ஒரு மாணவர் என 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் வெள்ள நீரை வெளியேற்றி 3 பேரின் சடலங்களையும் மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி கல்வியமைச்சர் அதிஷி மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அரசின் அலட்சியமே 3 மாணவர்களின் உயிரிழப்புக்கு காரணமென குற்றச்சாட்டிய மாணவர்கள், இந்த விபத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், போதிய பாதுகாப்பு வசதிகளின்றி பயிற்சி மையத்தை நடத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அதன் ஒருங்கிணைப்பாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதனிடையே ஐஏஎஸ் பயிற்சி மையத்தை பார்வையிட வந்த ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவாலுக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மாணவர்களின் உயிரிழப்பை வைத்து ஸ்வாதி மாலிவாலை அரசியல் செய்ய விடமாட்டோம் என அவர்கள் முழக்கமிட்டதால், அங்கு சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்வாதி மாலிவால், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டுமென வலியுறுத்தினார்.

Tags: Arrestdelhiias training students death
Share
Tweet
SendShare
Previous Post

விஜயவாடாவில் பட்ஜெட் விளக்க கூட்டம் ; மத்திய அமைச்சர் எல். முருகன் பங்கேற்பு!

Next Post

அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக்கணிப்பு : கமலா ஹாரிஸ் முன்னிலை!

Related News

மேற்குவங்கத்தில் வணிகரீதியான கச்சா எண்ணெய் உற்பத்தி தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!

தொங்கும் பனிப்பாறைகள் : ஆபத்தில் உள்ளதா இந்தியா? – சிறப்பு தொகுப்பு!

தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணைய சட்ட முன்வடிவு – பேரவையில் அறிமுகம்!

முல்லைப் பெரியாறு அணையில் 2-வது நாளாக நிபுணர் குழு ஆய்வு!

தங்கைகளுக்கு’ தரும் பாதுகாப்பு இதுதானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies