பாரிஸ் ஒலிம்பிக் 25 மீட்டர் துப்பாக்கி சுடுதல் தகுதி சுற்று போட்டியில், இந்தியாவை சேர்ந்த மனு பாக்கர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் மனு பாக்கர் ஏற்கெனவே இரண்டு வெண்கல பதக்கங்களை வென்றுள்ள நிலையில், மூன்றாவதாக ஒரு பதக்கம் கிடைக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
25 மீட்டர் துப்பாக்கி சுடுதல் தகுதி சுற்று போட்டியில், அவர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளார். தகுதிச்சுற்றில் அவர் 590 புள்ளிகளுடன் 2-ம் இடம் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார். இந்த சுற்றில் ஹங்கேரி வீராங்கனை வெரோனிகா 592 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும்,
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு இந்திய வீராங்கனை ஈஷா சிங் 18-வது இடத்திலும் உள்ளனர்.