வேலூர் அருகே மலை கிராம பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் அழகான பெண் குழந்தை பிறந்தது.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பாஸ்மார்பெண்டா மலை கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி என்பவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், கிருஷ்ணவேணியை ஏற்றிக்கொண்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது, பிரசவ வலி அதிகரிக்கவே, ஆம்புலன்ஸை நிறுத்தி மருத்துவ உதவியாளர் வெங்கடேசன் கிருஷ்ணவேணிக்கு பிரசவம் பார்த்துள்ளார். இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.