திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பட்டாசு தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
ஆவிச்சிபட்டியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் சிவகாசியை சேர்ந்த பணியாளர்கள், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென பட்டாசுகள் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் இருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். பட்டாசு ஆலை உரிமையாளர் செல்வம் தலைமறைவாகியுள்ள நிலையில் உடலை மீட்ட போலீசார், இறந்தவர்களின் விவரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.