கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தென் திருப்பதி ஸ்ரீவாரி கோயிலில் பவித்ரோற்சவ வைபவத்தையொட்டி திருவீதி உலா நடைபெற்றது.
ஜடையாம்பாளையத்தில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் ஆண்டுதோறும் பவித்ரோற்சவ வைபவம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் மலையப்ப சாமி, ஸ்ரீதேவி, பூதவியுடன் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.