மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என பாரதிய மஸ்தூர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பாரதிய மஸ்தூர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென பாரதிய மஸ்தூர் சங்கம் வலியுறுத்தியதாகவும், கடந்த 20 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ள மத்திய அரசை பாரதிய மஸ்தூர் சங்கம் பாராட்டி வரவேற்கிறது எனக்கூறியுள்ள அவர், மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு காலதாமதம் இன்றி அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மாநில அரசு ஊழியர்களுக்கும் முன் தேதியிட்டு அமல்படுத்திட உடனடியாக தகுந்த அரசாணையை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.