நாடாளுமன்ற வளாகத்தில் வ.உ.சியின் முழு உருவ வெண்கல சிலையை அமைப்பது தொடர்பாக பிரதமரை விரைவில் சந்திக்க உள்ளதாக வ.உ.சிதம்பரனாரின் கொள்ளு பேத்தி செல்வி தெரிவித்துள்ளார்.
வ.உ. சிதம்பரனாரின் 153-வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், அவரது திருவுருவ படத்திற்கு வ.உ.சி யின் கொள்ளுப் பேத்தி செல்வி மற்றும் அவரது குடும்பத்தார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செல்வி, நாடாளுமன்ற வளாகத்தில் வ.உ. சிதம்பரனாரின் முழு உருவ வெண்கல சிலையை நிறுவ, மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் செப்டம்பர் 5-ஆம் தேதியை தேசிய வழக்கறிஞர் தினமாக அறிவிக்க மத்திய அரசிடம் கோரிக்கை மனு அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். சிலை வைப்பது தொடர்பாக விரைவில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிகழ்வில் முன்னாள் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.