அயலக மண்ணிலும், அரசு கோப்பு பணி பார்க்கும் பணி தொடர்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் இ-ஆபீஸ் வழியே பணி தொடர்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் வளர்ச்சி முதலீட்டை ஈர்ப்பதற்காக அமெரிக்காவுக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டார்.
இந்நிலையில் தமிழகத்தின் அரசு கோப்புகளுக்கு வெளிநாட்டில் இருந்த படியே மு.க.ஸ்டாலின் கையொப்பமிட்டார். இதுதொடர்பாக அவர் தமது எக்ஸ் தளத்தில் அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகளின் பணி இ-ஆபீஸ் வழியே தொடர்கிறது என பதிவிட்டுள்ளார்.