ஜம்மு- காஷ்மீருக்கு சரியான நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்தார்.
ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, ஜம்முவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், முதன்முறையாக மூவர்ணக் கொடியின்கீழ், ஜம்மு-காஷ்மீர் மக்கள் வாக்களிக்க போவதாக தெரிவித்தார்.
, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எவ்வளவுதான் முயன்றாலும் குஜ்ஜார், பகார்வல், பஹாரி மற்றும் பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டில் கைவைக்க முடியாது என்றும், ஜம்மு-காஷ்மீரில் அமைதி திரும்பும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை கிடையாது என்றும் அமித் ஷா திட்டவட்டமாக கூறினார்.
ஜம்மு- காஷ்மீர் மாநில அந்தஸ்து விவகாரத்தில் காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாக விமர்சித்த அவர், சரியான நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என உறுதியளித்தார்.