பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கரு.நாகராஜன், தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருவதாக தெரிவித்தார்.