சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள கிராமப் பகுதிகளில் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
ஆத்தூர் அருகே நரசிங்கபுரம், தென்னங்குடி பாளையம், ராமநாயக்கன் பாளையம் உள்ளிட்ட கிராமங்களின் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி முழுவதும் சுமார் 12 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
சிறு, குறு தொழில் செய்து வாழும் மக்கள் மின்சாரம் இல்லாததால் பணி செய்ய முடியாமல் பெரும் அவதியடைந்தனர். இதுகுறித்து மின்சாரத்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் கேட்டபோது அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.