ஓணம் பண்டிகையை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், உலகம் முழுவதும் வாழ்கின்ற மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த ஓணம் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நன்னாளில், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், சகல வளமும் பெருகிட எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டிக் கொள்வோம் என எல். முருகன் தெரிவித்துள்ளார்.