உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், கங்கை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், தற்காலிகமாக படகுகள் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
மாநிலத்தின் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கங்கை நதியின் நீர்மட்டம் அபாய கட்டத்தை நெருங்கி வருகிறது. பீம்கோடா தடுப்பணையில் 293.15 சென்டிமீட்டர் அளவுக்கு ஆற்றில் தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது. இதனால் தசாஷ்வமேத் சதுக்கம் பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது.
இதேபோல் கனமழை காரணமாக அயோத்தி சரயு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிக்காக பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.