மழை வேண்டுமா? வேண்டாமா? : வருகிறது புதிய தொழில்நுட்பம் - அசத்தப்போகும் இந்தியா!
Oct 17, 2025, 01:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மழை வேண்டுமா? வேண்டாமா? : வருகிறது புதிய தொழில்நுட்பம் – அசத்தப்போகும் இந்தியா!

Web Desk by Web Desk
Sep 16, 2024, 07:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் பெருமழையைத் தடுக்கவும் அல்லது வறட்சியான இடங்களில் மழையை ஏற்படுத்தவும் கூடிய புதிய தொழில்நுட்பம், அடுத்த 5 ஆண்டுகளில், மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

வானிலை கண்காணிப்பு, முன்னறிவிப்பு ஆராய்ச்சித் திறனை மேம்படுத்தும் ‘மிஷன் மௌசம்’ திட்டத்துக்கு இரண்டு ஆண்டுகளில் 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

“மௌசம்” என்ற சொல்லுக்கு “வானிலை” அல்லது “பருவம்” என்று பொருள். மேலும், அரபுச் சொல்லான மவ்சிம், படகுகள் பாதுகாப்பாகப் பயணிக்கும் பருவத்தைக் குறிக்கும் சொல்லாகும்.

‘மிஷன் மௌசம்’, என்ற திட்டம், இந்தியப் பெருங்கடலை ஒட்டிய 39 நாடுகளுடன் கடல்சார் கலாச்சார தொடர்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த நாடுகளுக்கிடையேயான தேசிய கலாச்சாரங்களைப் புரிந்துகொள்வதும் மற்றும் நாடுகளுக்கு இடையேயான தகவல் தொடர்புகளை மீண்டும் உருவாக்குவதும் ‘மிஷன் மௌசம்’ திட்டத்தின் நோக்கமாகும்.

வளிமண்டல அறிவியல், வானிலை கண்காணிப்பு, முன்னறிவிப்பு மற்றும் வானிலை மேலாண்மை ஆகியவற்றில் ஆராய்ச்சி மற்றும் திறனை மேம்படுத்துவதே திட்டத்தின் நோக்கமாகும்.

இந்திய வானிலை ஆய்வு மையம், இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனம் மற்றும் வானிலை முன்னறிவிப்புக்கான தேசிய மையம் இணைந்து இந்த திட்டத்தை செயற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம், மேம்பட்ட கண்காணிப்பு அமைப்புகள், உயர் செயல்திறன் கொண்ட கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கவும், அதிக துல்லியத்துடன் வானிலையை கணிக்கும் ஒரு புதிய அளவுகோலை உருவாக்கவும் பயன்படும் என்று மத்திய அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறுகிய முதல் நடுத்தர அளவிலான வானிலை முன்னறிவிப்பு துல்லியத்தை ஐந்து முதல் 10 சதவீதம் வரை மேம்படுத்துவதையும், அனைத்து முக்கிய மெட்ரோ நகரங்களிலும் காற்றின் தரத்தை 10 சதவீதம் வரை மேம்படுத்துவதையும் மிஷன் மௌசம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

10 முதல் 15 நாட்கள் வரையிலான காலநிலை முன் கணிப்பை மூன்று மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்துக் மேம்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் புனேயில் உள்ள இந்திய வானிலை ஆய்வு நிறுவனத்தில் “கிளவுட் சேம்பர்” நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தொழில்நுட்ப கழக ஆய்வகத்தில், செயற்கையாக மேகங்களை உருவாக்கி சோதனைகளை மேற்கொள்ளும் நிலையில், எந்த வகையான மேகங்களை விதைக்க முடியும் என்பதையும் விதைப்பதற்கு என்னென்ன பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் மழையை அதிகரிக்க அல்லது தடுக்க எவ்வளவு விதைப்பு தேவைப்படுகிறது என்பதையும் கண்டறிய முடியும் என்றும், மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் மழை மற்றும் ஆலங்கட்டி மழையை செயற்கையாக அதிகரிக்க அல்லது அதிக மழை பெய்வதைத் தடுக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

மிஷன் மௌசம் திட்டத்தின் மூலம், விவசாயம், பேரிடர் மேலாண்மை, பாதுகாப்பு, சுற்றுச்சூழல், விமானப் போக்குவரத்து, நீர்வளம், மின்சாரம், சுற்றுலா, கப்பல் போக்குவரத்து, போக்குவரத்து, எரிசக்தி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளுக்கு நேரடியாகப் பயன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: central governmentnew technology prevent rains'Mission Mausam
ShareTweetSendShare
Previous Post

கும்மிடிப்பூண்டியில் அருகே சீல் வைக்கப்பட்ட கோயில் மீண்டும் திறப்பு!

Next Post

யாகி புயலால் பாதிக்கப்பட்ட தெற்காசிய நாடுகளுக்கு இந்தியா உதவி – நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு!

Related News

சக்திவாய்ந்த விமானப்படை பட்டியலில் இந்தியா முன்னிலை… சீனாவை பின்னுக்கு தள்ளி உலகளவில் 3-ம் இடம்…!

ஆத்திரமூட்டும் சீனா : இந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்கா!

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

லக்னோ மையத்தில் தயாராகி வரும் பிரம்மோஸ் ஏவுகணை : பாதுகாப்பு துறையிடம் முதல் தொகுப்பு வழங்கப்படுகிறது!

பாகிஸ்தானை துரத்தும் பேரழிவு : மரண அடி கொடுக்கும் தாலிபான்களால் அலறல்!

டாலர் வலுவிழப்பு பொங்கும் டிரம்ப் : அமெரிக்காவை நடுங்க வைக்கும் “BRICS”!

Load More

அண்மைச் செய்திகள்

தொழிலாளர்களின் குமுறல் அடங்குமா? : சீனாவை துரத்தும் “35 வயது சாபம்”!

இப்படி ஒரு பகுதியா? சூரிய ஒளியே படாதாம் : 136 நாட்கள் இருளில் மூழ்கிய நூனாவுட்!

தித்திக்கும் தீபாவளிக்கு ‘தேனூறும் ஜிலேபி’ ரெடி!

டிரம்பால் இணைந்த மோடி – லுலா கூட்டணி : புதிய சந்தைகளை உருவாக்க தீவிர முயற்சி!

இந்தியை தடை செய்யும் மசோதா திட்டமிட்ட செயல் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

ஆஃபீஸ் பாய் டூ CEO : மெய்சிலிர்க்க வைத்த இளைஞரின் வெற்றி பயணம்…!

அண்ணாமலைக்கு தனுஷ் நன்றி!

ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

சீனாவில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் எல்ஃப் V1 ரோபோ!

மதுரை : சொத்து வரி முறைகேடு விவகாரம் – புதிய மேயர் தேர்வு குறித்து ஆலோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies