யாகி புயலால் பாதிப்படைந்த தெற்காசிய நாடுகளுக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது.
தெற்காசிய நாடுகளான பிலிப்பைன்ஸ், வியட்நாம், மியான்மர் மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளில் யாகி புயல் மணிக்கு 149 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி பாதிப்பை ஏற்படுத்தியது.
இதில் 300-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ள பாதிப்பால் இடம்பெயரும் சூழலுக்கு தள்ளப்பட்டனர்.
இந்நிலையில் வியட்நாமுக்கு 1 மில்லியன் டாலர் மதிப்பிலும், லாவோஸுக்கு 1 லட்சம் டாலர் மதிப்பிலும் இந்தியா நிவாரண பொருட்களை அனுப்பியது. மேலும், வியட்நாமுக்கு 35 டன் நிவாரண பொருட்களையும் இந்தியா அனுப்பி வைத்தது.