ஆந்திராவில், நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி பிரமுகர் நாகேஸ்வரராவ் மகன் வித்யாசாகர் மற்றும் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பாலியல் தொல்லை கொடுத்தாக நடிகை காதம்பரி போலீசாரிடம் புகார் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின்பேரில், உளவுத்துறை முன்னாள் டிஜிபி ஆஞ்சநேயலு, விஜயவாடா முன்னாள் காவல் ஆணையர் கிராந்தி ராணாடா, துணை ஆணையர் விஷால் கன்னி ஆகியாேரை ஆந்திர அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.