தானியங்களை கொண்டு பிரதமர் மோடியின் உருவத்தை வரைந்த மாணவிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் பிறந்த நாள் நாடு முழுவதும் நாளை உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் 13 வயது மாணவி பிரெஸ்லி ஷெகினா என்பவர் பிரதமர் மோடியின் உருவத்தை தானியங்களை கொண்டு உருவாக்கி அசத்தியுள்ளார்.
இதனையடுத்து அவருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், சென்னையை சேர்ந்த பள்ளி மாணவி பிரெஸ்லி ஷெகினா பாரதப் பிரதமர் மோடி
மீது கொண்ட அன்பால், 800 கிலோ அளவிலான சிறுதானியங்களைக் கொண்டு பிரதமரின் உருவத்தை வரைந்துள்ளார்.
மாணவி பிரெஸ்லி ஷெகினா அவர்களின் இந்த சாதனை முயற்சியை பாராட்டுகின்ற விதமாக, இன்று அவருக்கு தொலைபேசியில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தேன் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.