திருச்சி மத்திய சிறைச் சாலையில் கைதி உயிரிழந்த சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தக்கோரி கைதியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பழூர் காந்தி நகரைச் சேர்ந்த திராவிடமணி என்ற கைதிக்கு நேற்றிரவு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து சிறை மருத்துவரால் முதலுதவி வழங்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கைதியின் உறவினர்கள், இறப்பில் சந்தேகம் இருப்பதாக குற்றஞ்சாட்டி, அரசு மருத்துவமனை முன், சாலை மறியலில் ஈடுபட்டனர்.