லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹாசன் நஸ்ரல்லாவின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அவரது உடலில் நேரடி காயம் ஏதுமில்லை என தகவல் வெளியானது.
பெய்ரூட்டில் இருந்த ஹிஸ்புல்லா தலைமையகத்தை இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி தகர்த்தது.
மேலும், இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லாக்களின் தலைவர் ஹாசன் நஸ்ரல்லா கொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது. தற்போது அவரது உடல் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், ஹாசன் நஸ்ரல்லா உடலில் நேரடி தாக்குதலுக்கான எந்தவொரு தடயமும் இல்லை என்று கூறப்படுகிறது. இதன் மூலம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் அதிர்ச்சியால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.