நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு!
Sep 30, 2026, 10:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Sep 30, 2024, 03:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய திரையுலகின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது, நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மிருகயா என்ற திரைப்படத்தின் மூலம் இந்தி திரையுலகில் கடந்த 1976-ஆம் ஆண்டில் அறிமுகமானவர் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி. திரையுலகில் ஏறத்தாழ 50 ஆண்டு காலம் அவர் ஆற்றிய பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக அவருக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்படுவதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். வரும் 8-ஆம் தேதி நடைபெறும் தேசிய திரைப்பட விழாவில் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது.

தனக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது தொடர்பாக மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, இதைக் கனவிலும் எதிர்பார்க்கவில்லை என உணர்ச்சிவசப்பட்டு கூறினார். மேலும், மேற்கு வங்கத்தில் ஃபிளாட்பாரமில் இருந்து வந்த தாம், இன்றைக்கு தாதாசாகேப் விருதைப் பெறுவதை கெளரவமாக கருதுவதாக கூறிய அவர், விருதை தனது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் அர்ப்பணிப்பதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, தாதாசாகேப் பால்கே விருது பெறும் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், இந்திய திரையுலகுக்கு மிதுன் சக்ரவர்த்தி ஆற்றிய ஈடுஇணையற்ற பங்களிப்பு காரணமாக தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

இதேபோல நடிகர் மிதுன் சக்ரவர்த்தியை பாராட்டி மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், அவர் மேலும் பல சாதனைகள் படைக்க தாம் வாழ்த்துவதாக கூறியுள்ளார்.

Tags: Dadasaheb Phalke Award Announcement for Actor Mithun Chakraborty!
Share
Tweet
SendShare
Previous Post

பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகள்!

Next Post

மின்மாற்றியில் தீ விபத்து – ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிப்பு!

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி வழக்கு; 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

ஆசிய துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்; டிராப் பிரிவில் தங்கம் வென்றார் நீரு தண்டா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள்; மோசமான நிலையில் சட்டம் ஒழுங்கு

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் குப்பைகளில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்; கருப்பு உடை அணிந்து திமுக கவுன்சிலர்கள் பங்கேற்பு

பேருந்து உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு

Load More

அண்மைச் செய்திகள்

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு; மீனவர்கள் போராட்டம்

ஜெம் வீரமணி வழக்கை அரசியலாக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தலை பின்பற்றவில்லை;தவெக அரசு மீது திமுக குற்றச்சாட்டு

ஜெம் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு; பொதுமக்கள் தகவல் அளிக்க அழைப்பு

இத்தாலி பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் தடை : பிரதமர் மெலோனி அதிரடி உத்தரவு – சிறப்பு தொகுப்பு!

‘இந்தியா-ஏஐ மிஷன்’ திட்டம் : ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் மத்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மருத்துவ சுற்றுலாவில் உச்சம் : இந்தியாவிற்கு படையெடுக்கும் நோயாளிகள் – சிறப்பு தொகுப்பு!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – பந்தல்கால் நடும் நிகழ்ச்சி கோலாகலம்!

ஹரியானாவில் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது சிறுமி – மருத்துவமனையில் உயிரிழப்பு!

கோவையில் குட்கா கடத்தல் வழக்கில் தப்பியோட முயன்ற இருவருக்கு கைகளில் எலும்பு முறிவு!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies