சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பாலம் அருகே மின்மாற்றியில் ஏற்பட்ட தீ விபத்தால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மின் மாற்றிகளில் பழுது ஏற்பட்டு தீ விபத்து ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ஈக்காட்டுத்தாங்கல் கலைமகள் நகரில் உள்ள மின்மாற்றியில் தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் ஒருமணி நேரத்திற்கும் மேலாக மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.