வடமாநில கொள்ளையர்களால் தாக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காவலர்களிடம் நீதிபதி விசாரணை மேற்கொண்டார்.
கேரள மாநிலம் திருச்சூரில் ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்கள் கண்டெய்னர் லாரி மூலம் நாமக்கல் வழியாக தப்ப முயன்றனர்.
அவர்களை பிடிக்க முயன்றபோது கொள்ளையர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போலீசார் தற்காப்புக்காக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் கொள்ளையர்கள் தாக்கியதில் குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி மற்றும் மல்லசமுத்திரம் உதவி ஆய்வாளர் ரஞ்சித் குமார் ஆகியோர் காயமடைந்து நாமக்கல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வரும் காவல் ஆய்வாளர் தவமணி மற்றும் உதவி ஆய்வாளர் ரஞ்சித் குமார் ஆகியோரிடம் குமாரபாளையம் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாலதி நேரடி விசாரணை நடத்தினார்.