காந்தி ஜெயந்தியை ஒட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மெட்ரோ ரயில்கள் இரவு 11 மணி வரை இயக்கப்படும் எனவும், பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டும் 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் எனவும், குறிப்பிடப்பட்டுள்ளது.
மீதமுள்ள நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இடக்கப்படும் எனவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.