ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மத்திய அமைச்சர் பூபதி ராஜு தரிசனம் செய்தார்.
திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 4ஆம் தேதி தொடங்கிய நிலையில், நாள்தோறும் காலை, மாலை என மலையப்ப சுவாமி, வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். வரும் 12ஆம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெறவுள்ள நிலையில், திருப்பதி கோயிலில் மத்திய அமைச்சர் பூபதி ராஜு ஆய்வு மேற்கொண்டார்.
ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், திருமலையில் பிரம்மோற்சவ விழாவின் கலை நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள பரத கலைஞர்களுடன் கலந்துரையாடினார். மேலும், பரத கலைஞர்களுடன் அவர் குழு புகைப்படம் எடுத்து கொண்டார்.