ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், நவராத்திரியை முன்னிட்டு கனக துர்க்கை கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
நவராத்திரி விழாவின் 4ஆம் நாளில் கனக துர்க்கை சிறப்பு அலங்காரித்தில் காட்சியளித்தார். கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சிலர் குங்குமத்தில் அர்ச்சனை செய்து கனக துர்க்கையை வழிபட்டனர்.