ரஜினி நடித்துள்ள வேட்டையன் படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில், திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை ரோகினி திரையரங்கில் வேட்டையன் படம் வெளியீட்டை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். திரையரங்கு வளாகத்தில் கூடிய ரசிகர்கள், ஆடி-பாடியும், பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்பபடுத்தினர்.
சென்னை காசி திரையரங்கு முன் கூடிய ரஜினி ரசிகர்கள், கட்-அவுட்கள் வைத்தும், ரஜினியின் உருவப்படத்திற்கு தேங்காய் உடைத்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நெல்லை ராம் திரையரங்கில் 9 மணிக்கு வேட்டையன் திரைப்படம் வெளியான நிலையில், மேளதாளங்கள் முழங்க ரசிகர்கள் உற்சாகத்துடன் நடனமாடினர். பட்டாசுகள் வெடித்தும், பேனர்கள் வைத்தும் வேட்டையன் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அம்பாசமுத்திரம் பாலாஜி திரையரங்கில் வேட்டையன் பட வெளியீட்டை பட்டாசு வெடித்து ரசிகர்கள் கொண்டாடினர். தொடர்ந்து 300-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரையரங்கிற்கு வருகை தந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேட்டையன் திரைப்படம் வெளியானதை ஒட்டி வேலூரில் உள்ள திரையரங்கில் கேக் வெட்டி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ரஜினியின் பேனருக்கு பால் அபிஷேகம் செய்தும், பட்டாசுகள் வெடித்தும் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
புதுச்சேரியில் வேட்டையன் திரைப்படம் வெளியானதை ஒட்டி ரஜினியின் பேனருக்கு பால் அபிஷேகம் செய்தும், தேங்காய் உடைத்தும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவிலும் வேட்டையன் படம் வெளியான நிலையில், ரசிகர்கள் குடும்பத்தினருடன் படத்தை கண்டுகளித்தனர். மேலும், வேட்டையன் திரைப்படம் சிறப்பாக இருப்பதாகவும் அமெரிக்க வாழ் ரஜினி ரசிகர்கள் தெரிவித்தனர்.